business

img

கச்சா எண்ணெய் விலை 40 நாட்களில் 8 டாலர் வீழ்ச்சி.... இந்தியாவிலோ விலை உயர்வு....

கொச்சி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தாலும் எரிபொருள் விலையை குறைக்காமல் மோடி அரசு மக்களை நெருக்குகிறது. 40 நாட்களில், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் (60 லிட்டர்) 8.21 டாலராக (ரூ. 610.57) சர்வதேச சந்தையில் குறைந்தது. 

எனினும், கடந்த 24 நாட்களாக விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரு பைசாகூட குறைக்க தயாராகவில்லை. கச்சா எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10.17 குறைந்துள்ளது. நிபுணர்களின் கருத்துப்படி, பெட்ரோல்மற்றும் டீசலின் விலையை குறைந்த பட்சம் ஆறு ரூபாயாவது குறைக்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள் னர். தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.82, டீசல் விலை ரூ.96.47 ஆக உள்ளது.
ஜூலை 2 அன்று, கச்சா எண்ணெய் 77.51 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது. பின்னர் அது குறையத் தொடங்கியது. இது ஜூலை 15 அன்று 74.07 ஐ எட்டியது. இந்த நாட்களில் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.75 உயர்த்தப்பட்டது. அந்த நேரத்தில் விலை ரூ.102.89 ஆனது. கச்சா எண்ணெய் விலை 73.30 டாலராக குறைந்தாலும், பெட்ரோல் விலை மீண்டும் ரூ.103.82 ஆக உயர்த்தப் பட்டது.சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை69.32 டாலராக குறைந்துள்ள போதிலும், பாஜக அரசு எரிபொருள் விலையை குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளைக்கு துணை நிற்கிறது. ஊரடங்கின் போது போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக எரிபொருள் தேவைகுறைந்தது. அது எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது. ஆனால், நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் ஜனவரி மற்றும் மார்ச் 2021 க்கு இடையில் (2020-21 நிதியாண்டின் கடைசி காலாண்டு) பெரும் லாபம் ஈட்டியதாகக் காட்டுகின்றன. ஐஓசி ரூ.9144 கோடி லாபம் ஈட்டியது. பிபிசிஎல் ரூ.11,940 கோடி லாபம் ஈட்டியது.

;